தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" - மகாகவி சுப்பிரமணிய பாரதி
Share |

Sunday, March 8, 2009

வாழ்க்கை...

வாழ்க்கை ஒரு கடமை என்றால் அதை நீ நிறைவேற்று
வாழ்க்கை ஒரு விளையாட்டென்றால் அதை நீ விளையாடு
வாழ்க்கை ஒரு ஆனந்தம் என்றால் அதை நீ அனுபவி
வாழ்க்கை ஒரு சோதனை என்றால் அதை நீ சமாளி
வாழ்க்கை ஒரு சோகம் என்றால் அதை நீ எதிர்த்து நில்
வாழ்க்கை ஒரு புதிர் என்றால் அதை நீ விடுவி
வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால் அதனுடன் நீ போராடு
வாழ்க்கை ஒரு சவால் என்றால் அதை நீ சந்தி
வாழ்க்கை ஒரு அன்பு என்றால் அதில் நீ இன்பம் காண்
வாழ்க்கை ஒரு கனவென்றால் அதை நீ நனவாக்கு
வாழ்க்கை ஒரு அழகென்றால் அதை நீ ரசி
வாழ்க்கை ஒரு சத்தியம் என்றால் அதை நீ கடைப்பிடி
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் என்றால் அதை நீ பயன்படுத்து
வாழ்க்கை என்பது கற்றுக்கொடுத்து வருபதல்ல
வாழ்க்கை என்பது வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்

வலையில் படித்து ரசித்த ஹைகூ கவிதைகள்

***************************
சூறைக் காற்றில் அலையும் கிளையின்
நுனியைத் துரத்தும்
பட்டாம் பூச்சி

******************************
ரேடியோ பாட்டு. . .
தலையாட்டும் தாத்தா. . .
நின்று விடுமோ . . . .?

*****************************

பழனி படிக்கட்டு சடை தாடி சாமியார்
காசு வேண்டி விரித்த பேப்பரில்
சவர பிளேடு விளம்பரம் !

*********************************************

காற்றில் அசையும்
நெற்கதிர் உச்சியில்
பயத்துடன்
கம்பளிப் பூச்சி !

************************

சர்க்கஸ் வலையின் ஆட்ட்த்தில்
கீழே விழுந்தது
சிலந்தி !

************************

சலனமின்றி ஓடும் நதி

கூட ஓட முடியாத

மரத்தின் நிழல்

************************

வெறும் நட்பென்று விலகியே இருந்த

தண்டவாளங்கள் சங்கமித்தன

காதலில் தொடுவானத்தில்

************************


விஷம் வாங்கியதில்

சில்லறைக்குப் பதில்

கிடைத்தது இரண்டு சாக்லேட்

************************

எழுத்துக்கள்

பிரசுரிக்கப் படுவதில்லை!

பிரசவிக்கப் படுகின்றன!

************************

படைப்பை

அனுப்பிவிட்டுக்

காத்திருந்தான்!

பேறுக்கால சுகம்!

************************

சூல் கொண்ட

கருப்பை!

புதிய கதைக்கான

கரு!


************************

வளை காப்பு!

படைப்பைப் படித்த

நண்பனின் பாராட்டு!

************************

வானக் காதலனுக்காய்
மழைக்காதலி எழுதிய கவிதை
வானவில்.

************************

தன்னிறைவு பெற்றவர்கள்
மின் உற்பத்தியில்,
மின்மினிப் பூச்சிகள்.

************************

உற்சாகத்தில் பறந்து சிரிக்கின்றது
வாழ்வு முடிந்தது அறியாமல்,
கிளைவிட்டு பிரியும் இலை.

************************

பழக்கமில்லா புதியவன் என்பதால்
கடிக்கின்றதோ?!
செருப்பு.

************************

புகைந்து அழியும் போதும்
அஸ்திவாரமிட்டுச் செல்கிறது அழிவிற்கு,
சிகரெட்.

************************

உருகி அழும்போதும்
இருள் விலக்கி ஒளிர்கின்றது
மெழுகுவர்த்தி

************************
உங்கள் வருகைக்கு நன்றி..மீண்டும் வருக