இதோ தேர்ந்தெடுத்த முல்லா ஜோக்ஸ் சில...
உங்களுக்காக...
ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நண்பன் கிண்டலாக . “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.
முல்லா கம்பீரமானார். “எப்போது அவள் வருகிறாள் ?“ என்று கேட்டார்.
“இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன்
அந்த நாள் நசுருதீனின் பொழுது மன அமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பிடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.
நேரம் போய் கொண்டே இருந்தது.
அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.
இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.
அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “தனக்கு திருமணம் ஆகவில்லை“ என்பது
------------------------------------------------------------------------------------
முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்
”ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன் “
அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் “ இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? “
”பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது ” என்றார் முல்லா
பெண்ணின் தந்தை : ??????
----------------------------------------------------------------------------
முல்லா நஸ்ருதீன் பெண்கள் மீது விருப்பம் கொண்டவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் அவருக்கு பெண்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமே கிடையாது. எவரும் அவரை விரும்ப மாட்டார்கள். ஒரு பெண்ணை அவர் முதன்முறையாக சந்திக்க சென்றார்.அதற்கு முன் அவர் தனது நண்பனிடம் கேட்டார்; “உன்னுடைய ரகசியம் என்ன ? நீ பெண்களுடன் நன்றாக பழகுகிறாயே ? நீ எளிதில் அவர்களை மயக்கிவிடுகிறாய். ஆனால் நான் தோல்வி காண்கிறேன். எனவே எனக்கு எதாவது வழிவகை சொல்லிக்கொடு. நான் முதன்முறையாக ஒரு பெண்ணைப் பார்க்க போகிறேன், எனக்குச் சில ரகசியங்களை சொல்லிக்கொடு.”
நண்பன் கூறினான் ; “மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். எப்போதும், உணவைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, தத்துவத்தைப்பற்றிப் பேசு”.
”ஏன் உணவைப்பற்றி பேச வேண்டும்” என்று கேட்டார் முல்லா. நண்பன் கூறினான்; “உணவைப் பற்றி பேசுவதை பெண் விரும்புவதால் நான் அதைப் பற்றிப் பேசுகிறேன் . ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணவில் விருப்பம் உண்டு. அவள் குழந்தைக்கு உணவாகிறாள், மனித சமுதாயம் முழுமைக்கும் அவள் உணவாக இருக்கிறாள். எனவே அடிப்படையில் அவள் உணவில் விருப்பம் கொண்டிருக்கிறாள்”.
“ சரி குடும்பத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ?” என்று முல்லா கேட்டார். “ அவளுடைய குடும்பத்தைப் பற்றி நீ பேசினால் உன்னுடைய உள்நோக்கங்களை நேர்மையானவையாக காட்டும் “ என்று நண்பன் பதில் கூறினான்.
“தத்துவத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ? “ என்று முல்லா அடுத்த கேள்வியை கேட்டார். அதற்கு அந்த நண்பன் பதில் தருகையில் , “தத்துவத்தைப்பற்றி பேசினால் அந்த பெண் தன்னைப் புத்திசாலியாக கருதிக் கொள்கிறாள்“ என்றான்
உடனே முல்லா விரைந்து சென்றார். அந்த பெண்ணைக் கண்டதும் “ ஹலோ , உனக்கு நூடுல்ஸ் பிடிக்குமா ?” என்று கேட்டார். அதை கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள், “ இல்லை “ என்று பதில் கூறினாள் . முல்லா இரண்டாவது கேள்வியைக் கேட்டார் , “ உனக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்களா ?
“இல்லை” என்றாள். முல்லா ஒரு நிமிடம் திகைத்தார் . “ தத்துவத்தை எப்படி ஆரம்பிப்பது? “ என்று யோசித்தார். ஒரு வினாடி கழித்து கேட்டார், “ உனக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவனுக்கு “ நூடுல்ஸ்” பிடிக்குமா ? “
source : http://pudhiyayugam.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88
" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" - மகாகவி சுப்பிரமணிய பாரதி
Monday, December 20, 2010
Wednesday, October 20, 2010
Subscribe to:
Posts (Atom)